Published : 24,Oct 2019 07:00 AM

14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்... நாங்குநேரியில் அதிமுக அமோகம்!

Nanguneri-admk-candidate-leading

நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் சுமார் 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார்.

இடைத்தேர்தல் நடைபெற்ற நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வாக்குகள் எண்ணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இரு இடைத்தேர்தல் தொடர்பாக முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.

9-வது சுற்று முடிவில் நாங்குநேரி தொகுதியில் 14 ஆயிரத்து 880 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர், ரெட்டியார் பட்டி நாராயணன் முன்னிலையில் உள்ளார்.

நாங்குநேரி:

அதிமுக- 44, 246 

காங்கிரஸ் - 32366

நாம் தமிழர் -1124

எட்டு சுற்றில் அதிமுக வேட்பாளர் முன்னிலையில் இருந்த நிலையில் 9-வது சுற்றில் மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் இருந்தார். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 4597 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்ப்பாளர் 3161 வாக்குகள் பெற்றுள்ளார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்