நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் காமராஜர் நகர் தொகுதிகளில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன.
நாங்குநேரி இடைத்தேர்தலில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 624 வாக்குகள் பதிவாகின. மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாளை அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 22 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சியின் முகவர்களுக்கு என தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 659 வாக்குகள் பதிவாகின. மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்குகள் எண்ணும் மையமான, விழுப்புரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு துணை ராணுவப்படை உள்ளிட்ட 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு வாக்குகள் எண்ண சுமார் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன.
புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான 24 ஆயிரத்து 296 வாக்குகள் 3 சுற்றுகளாக எண்ணப்படவுள்ளன. இதற்காக லால்பேட்டையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையை நடைபெறும் இடங்களில் கண்காணிப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்