நொச்சிப்பட்டி திருமூர்த்தியை பின்னணி பாடகராக அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைவதாக இசையமைப்பாளர் இமான் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நொச்சிப்பட்டியைச் சேர்ந்த கண் பார்வை தெரியாத திருமூர்த்தி என்பவர் விஸ்வாசம் படத்தில் வரும் 'கண்ணான கண்ணே' பாடலை பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதனை தன் செல்போனில் படம் பிடித்த ஒருவர், இசையமைப்பாளர் இமானுக்கும், பாடகர் சித் ஸ்ரீராமுக்கும் டேக் செய்து ட்வீட் செய்தார்.
இதனைக் கண்ட இமான், அவருடைய விவரங்கள் கிடைக்குமா என கோரிக்கை விடுத்தார். அடுத்த சில மணிநேரங்களில் அவருடைய தகவலைப் பெற்ற இமான், திருமூர்த்தியின் தகவல்களை கொடுத்தோருக்கு நன்றி. விரைவில் அவரை பாட வைக்க உள்ளேன். திருமூர்த்திக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என தெரிவித்துள்ளார். அதேபோல் பாடகர் சித் ஸ்ரீராமும் திருமூர்த்தி குரல்வளத்தை பாராட்டினார்.
இந்நிலையில் திருமூர்த்தி தன் இசையில் ஒரு மனம் உருகும் பாடலை பாடியுள்ளதாக இசையமைப்பாளர் இமான் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் படத்தின் விவரம் குறித்தும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். அதில், ''நொச்சிப்பட்டிதிருமூர்த்தியை பின்னணி பாடகராக அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி. ரத்தினசிவா இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிக்கும் என்னுடைய அடுத்தப்படமான சீறுவில் அவர் பாடவுள்ளார். பார்வதி பாடல் வரிகளை எழுதியுள்ளார். ஆத்மார்த்தமான பாடல் விரைவில் வருகிறது'' என குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!