வீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை !

வீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை !
வீறுநடை போடும்  கோலியின் படை - சாதனை மேல் சாதனை !

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி வென்றதன் மூலம் 3-0  என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றுள்ளது. இதன் மூலம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 11 டெஸ்ட் தொடரை வென்ற முதல் அணி என்ற உலக சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. 

இதற்கு முன்பு சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 10 டெஸ்ட் தொடர்களை வென்றதே சாதனையாக இருந்தது. இந்திய அணி தற்போது அந்தச் சாதனையை முறியடித்துள்ளது.  


இந்திய அணி சொந்த மண்ணில் கடைசியாக 2012ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. இதற்கு பிறகு இந்திய அணி தற்போது வரை சொந்த மண்ணில் விளையாடி உள்ள 11 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. 

அதாவது 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற தொடரை 4-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது முதல் தற்போது வரை இந்திய அணி தொடர்ச்சியாக 11 தொடர்களை வென்றுள்ளது. 

அதேசமயம் இந்தக் காலளவில் இந்திய அணி விளையாடி உள்ள 33 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 26 போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ளது. வெறும் ஒரே ஒரு போட்டியில் மட்டும் தோல்வி அடைந்துள்ளது. 2017ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இந்திய அணி புனேவில் நடைபெற்ற போட்டியில் தோல்வி அடைந்தது. அந்தப் போட்டி தவிர, சொந்த மண்ணில் நடைபெற்ற மற்ற எந்தப் போட்டிகளிலும் இந்திய தற்போது வரை தோல்வி அடைய வில்லை.  

இந்தக் காலகட்டங்களில் இந்திய அணியின் கேப்டனாக தோனி இரண்டு தொடர்களிலும், விராட் கோலி 8 தொடர்களிலும் கேப்டனாகவும் வெற்றிப் பெற்றுள்ளனர். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடருக்கு மட்டும் ரஹானே கேப்டனாக இருந்து வெற்றிப் பெற்றுள்ளார். 

இந்தியாவின் இந்தத் தொடர் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பது சொந்த மண்ணில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் விக்கெட் வேட்டை மற்றும் தற்போது எழுச்சி கண்டுள்ள இந்திய அணியின் வேகப்பந்து வீச்சும் தான்.

இவை மட்டுமில்லாமல் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு ஃபாலோ ஆன் கொடுத்தன் மூலம் 8 முறை எதிரணிக்கு ஃபாலோ ஆன் கொடுத்த முதல் கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இதற்கு முன்பு முகமது அசாருதின் 7 முறை எதிரணிக்கு ஃபாலோ ஆன் கொடுத்ததே சாதனையாக இருந்தது. இதனை விராட் கோலி தற்போது முறிய அடித்துள்ளார். 

மேலும் கோலி கேப்டனாக பெரும் 9ஆவது இன்னிங்ஸ் வெற்றி இதுவாகும்.அத்துடன் கோலி இதுவரை கேப்டனாக செயல்பட்டுள்ள 51 போட்டிகளில் 31 போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com