நாகை மாவட்டம் குத்தாலம் அருகே தொழிலதிபர் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளைடித்து சென்றுள்ளனர்.
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே தேரிழந்தூரைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் குத்தாலத்தில் கேஸ் ஏஜென்சி மற்றும் ஷாப்பிங் மால் நடத்தி வருகிறார். தீபாவளியை முன்னிட்டு வியாபாரம் அதிக அளவில் இருந்ததால் குடும்பத்தினர் அனைவரும் நேற்று மாலை வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றுள்ளனர்.
இரவு 10மணிக்கு முத்துக்குமார் மனைவி சித்ராவுடன் வீட்டிற்கு திரும்பியுள்ளார். கதவை திறந்து உள்ளே சென்றபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 13 லட்சம் ரொக்கம், 2 லட்சம் மதிப்பிலான வைர அட்டிகை, 8 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மயிலாடுதுறை டிஎஸ்பி வெள்ளைத்துரை தலைமையில் குத்தாலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். நாகையிலிருந்து கைரேகை நிபுணர்கள் மோப்பநாய் வரவழைக்கபட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
Loading More post
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
'யாருக்கு கவலையாக இருந்தாலும்’ - பலியான 4 உயிர்களும், ஐடி ஊழியரின் தற்கொலை கடிதமும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி