‘முட்டாள்தனமாகதான் சிந்திக்கிறார்கள்’ - விஜய் ரசிகர்கள் மீது 'கைதி' தயாரிப்பாளர் காட்டம்

‘முட்டாள்தனமாகதான் சிந்திக்கிறார்கள்’ - விஜய் ரசிகர்கள் மீது 'கைதி' தயாரிப்பாளர் காட்டம்
‘முட்டாள்தனமாகதான் சிந்திக்கிறார்கள்’ - விஜய் ரசிகர்கள் மீது 'கைதி' தயாரிப்பாளர் காட்டம்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வருகிற அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாக உள்ள படம் பிகில். இதற்கு முன்னர் விஜய் அட்லி உடன் இணைந்த  ‘தெறி’ ‘ மெர்சல்’ஆகிய இரு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றதால் இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பிகில் படம் வெளியாக உள்ள அன்றைய தினமே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் கைதி படமும் வெளியாக இருக்கிறது.

இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிகில் படத்தை தணிக்கை செய்த தணிக்கை குழுவினர் படத்திற்கு யு ஏ சான்றிதழ் வழங்கினர். இது மட்டுமல்லாமல் வன்முறைகாட்சிகள், மற்றும் சில வார்த்தைகளையும் படத்திலிருந்து நீக்கினர். இதனைதொடர்ந்து பிகில் படத்தின் கதை திருட்டு வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் படத்திற்கான இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. 

அதே  நிலையில் கைதி படத்தை தணிக்கை செய்த தணிக்கை குழுவினர் படத்திற்கு யு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். கைதி படத்தின் அனைத்துக் கட்ட பணிகளும் முடிவடைந்துள்ள  நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு பிஸியாக இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக கைதி படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு படத்தை பிரோமோட் செய்யும் நோக்கில், சமூக வலைதளத்தில் ஒரு போஸ்டை பதிவிட்டார். அதில் நோ ஹீரோயின், நோ டூப், நோ சாங்ஸ், நோ ரொமான்ஸ் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், இந்த போஸ்டை பிகில் படத்தை குறிப்பிட்டுதான் பிரபு சொல்கிறார் என நினைத்து மீம்ஸ் வழியாக கிண்டலடிக்க ஆரம்பித்து விட்டனர் விஜய் ரசிகர்கள். இதனால் சமூகவலைதளத்தில் எஸ்.ஆர்.பிரபுவுக்கும் நெட்டிசன்களுக்கும் இடையே கருத்து மோதல் உருவானது. 

அதில் விஜய் ரசிகர் ஒருவர்  ‘விஜய் சாரை ஏன் வெறுக்கிறீர்கள். உங்களுடைய ஒவ்வொரு படத்தின் ரிலீஸின் போதும், விஜய் சாரை டேமேஜ் செய்கிறீர்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார். மற்றொரு ரசிகர் ”எனக்கு நன்றாக தெரியும் நீங்கள் விஜய் சாருக்கு எதிரானவர் அல்ல. அப்படி இருக்கும் போது ஏன் இப்படி எதிர்மறையான விளம்பரங்களை செய்கிறீர்கள். இரண்டு படமும் நன்றாக ஓட வேண்டும்தான். தங்களை இழிவுப் படுத்தி நீங்கள் செய்யும் விளம்பரங்கள் எதிர்மறையான தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தும். எனவே நேர்மறையான விளம்பரங்களை பரப்புங்கள்” என்று அந்த ரசிகர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு தனது ட்விட்டரில் பதிலளித்த கைதி படத்தின் தயாரிப்பாளர் பிரபு, “பல ரசிகர்கள் இப்படி முட்டாள்தனமாகதான் சிந்திக்கிறார்கள். இவை ஒவ்வொன்றையும் என்னால் அவர்களுக்கு விளக்க முடியாது. நாங்கள் திரைப்படங்களை உருவாக்குகிறோம். அதற்காக நாங்கள் நிற்கிறோம்! அவ்வளவுதான். பெரும் பான்மையான ரசிகர்கள் சண்டையிடுவதற்காகவே கிண்டல் செய்கிறார்கள்.

தனக்கு எல்லா படங்களும் நன்றாக ஓட வேண்டும். தவறான பதிவுகளை பதிவு செய்து விட்டு, அதன் மூலம் மாற்றத்தை எதிர்பார்க்கும் முகமில்லாத ரசிகர்களை பற்றி எனக்கு கவலையில்லை”  என்று காட்டமாக தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com