Published : 20,Oct 2019 04:38 PM
மணிலாவில் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்த மகாத்மா காந்தி சிலை

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மகாத்மா காந்தி சிலையை மணிலாவில் திறந்து வைத்தார்.
காந்தியின் 150 ஆவது ஆண்டு விழா உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய அரசும் நாடு முழுவதும் இதற்கான விழாவை மிக விமர்சையாக நடத்தி வருகிறது.
இந்நிலையில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அமைக்கப்பட்ட மகாத்மா காந்தியின் சிலையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். ஐந்து நாள் அரசுமுறை பயணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு ராம்நாத் கோவிந்த் சென்றுள்ளார்.
முதல் கட்டமாக பிலிப்பைன்ஸ் சென்றுள்ள ராம்நாத் கோவிந்த், இரு நாட்டு உறவு குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், மணிலாவில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.