[X] Close

தகாத உறவால் நேர்ந்த விபரீதம் : பெண்ணுக்கு அரிவாள் வெட்டு 

man-Trying-to-kill-lady-in-poolambadi

பெரம்பலூர் அருகே தகாத உறவின் காரணமாக ஏற்பட்ட பிரச்னையில் பெண்ணை அரிவாளால் வெட்டிய நபரை போலீசார் தேடிவருகின்றனர். 

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி பச்சையம்மாளுக்கும் 
அதே ஊரைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து பச்சையம்மாளின் கணவர் பழனிச்சாமிக்கு தெரிய வர அவர் மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.


Advertisement

இந்நிலையில், இன்று காலை வயல் வேலைக்கு சென்ற பச்சையம்மாளிடம், செந்தில் குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது ஆத்திரமடைந்த செந்தில்குமார் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பச்சையம்மாளை வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த பச்சையம்மாளை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவான செந்தில் குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close