நாமக்கல் கடைவீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகன சீட்டின் அடியில் புகுந்த நாகப் பாம்பை, 1 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு துறையினர் பிடித்துச் சென்றனர்.
நாமக்கல் கடைவீதி செங்கழனி பிள்ளையார் கோயில் அருகே, நடராஜர் என்பவர் கவரிங் நகைகள் விற்பனை செய்யும் கடையினை நடத்தி வருகிறார். இவர் இன்று காலை 10 மணியளவில் வழக்கம்போல் கடையினை திறந்து சுத்தம் செய்துக் கொண்டு இருந்தார்.
அப்போது கடையின் மேற்கூரையில் இருந்து விழுந்த சிறிய பாம்பு ஒன்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நடராஜனின் இருச்சக்கர வாகனத்தின் உட்பகுதியில் புகுந்தது. அந்தப் பாம்பை வெளியேற்ற நடராஜன் உள்ளிட்டோர் முயன்ற போதும் பாம்பு வெளியே வராத நிலையில் நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், இருசக்கர வாகனத்தின் ஒவ்வொரு பாகங்களாக கழற்றிய போது பாம்பு சீட்டின் அடிபாகத்தில் உள்ள இன்ஜின் மேல் படுத்திருந்து. உடனே அதனை பிடித்தனர். பிடிப்பட்டது ஒன்றரை அடி நீளமுள்ள நாகப் பாம்பு எனத் தெரிய வந்ததது. அதனை வனப்பகுதியில் விட தீயணைப்பு துறையினர் எடுத்துச் சென்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில்இ மக்கள் அதிகளவு கூடும் பகுதியில் நாக பாம்பை பிடித்தது பொதுமக்களிடத்தில் சற்று அச்சத்தை ஏற்படுத்தியது.
Loading More post
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
இதயங்களை வென்ற ரஜத் படிதார் - லக்னோவை வீழ்த்தி அசத்திய பெங்களூரு
ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கு: எப்ஐஆரில் இருந்து சிலரது பெயரை நீக்க நடவடிக்கை
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!