[X] Close

தமிழ் சினிமாவின் முதல் கதைத் திருட்டு வழக்கு... - ‘எம்.ஜி.ஆர் - விஜய்’

-Mgr---Vijay----story-theft---1936---2019

கடந்து சில வருடங்களாக மட்டுமே தமிழ் சினிமா கதைத் திருட்டு வழக்கை சந்திக்கிறது என நினைக்கிறோம்., ஆனால் உண்மை அதுவல்ல., கருப்பு வெள்ளை காலம் தொட்டே தமிழ் சினிமாவும் கதைத்திருட்டு, வழக்கும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான படம் சதிலீலாவதி. இத்திரைப்படம் 1936’ல் வெளியானது. தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாகவும் பின்னாளில் தமிழகத்தின் முதலமைச்சராகவும் விவரூபமெடுத்த எம்.ஜி.ராமச்சந்திரன் நடித்த முதல் படம் இது. எம்.ஜி.ஆருக்கு மட்டுமல்ல கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.பாலையா மற்றும் இத்திரைப்படத்தை இயக்கிய எல்லீஸ் ஆர்.டங்கன் ஆகியோருக்கும் இதுதான் முதல் படம். ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ்.எஸ்.வாசன் எழுதிய தொடர்கதை பிறகு அதே பெயரில் சினிமாவாக உருவானது. இத்தகைய சிறப்பு கொண்ட சதிலீலாவதி கதைத்திருட்டு வழக்கில் சிக்கியது. இது தான் தமிழ் சினிமா சந்தித்த முதல் கதைத் திருட்டு வழக்கு.


Advertisement

அதே காலகட்டத்தில் உருவான மற்றுமொரு படம் பதிபக்தி. இது சென்னையில் மட்டும் 365 முறை மேடை நாடகமாக அரங்கேறியது. எஸ்.எஸ்.வாசனின் சதிலீலாவதி., பதிபக்தியின் கதை என அறிந்த பட நிறுவனம் சதிலீலாவதியின் தயாரிப்பாளர் மீது கதைத்திருட்டு வழக்கு தொடுக்கிறார்கள். ஆச்சர்யம் என்னவென்றால் கிட்டத் தட்ட இரு கதையும் ஒரே மாதிரி இருந்தது.

வழக்கு விசாரனையில் பதிலுரைத்த எஸ்.எஸ்.வாசன் 'சதிலீலாவதி'யின் கதை 'பதிபக்தி'யில் இருந்து திருடப்பட்டது என்கிற குற்றச்சாட்டு தவறு. ஏனெனில், 'இந்தக் கதை ஹென்றி வுட் எழுதிய 'டென்ஸ்பேரி ஹவுஸ்' என்கிற நாவலைத் தழுவி எழுதப்பட்டது என்று நீதிமன்றத்தில் நிரூபிக்க வழக்கு சுமுகமாக முடிவுக்கு வந்தது.

தற்போது இயக்குனர் அட்லி இயக்கியிருக்கும் பிகில் படமும் கதைத் திருட்டு வழக்கில் சிக்கியுள்ளது. அட்லியின் முதல் படம் தொட்டு அவர் மீது கதைத் திருட்டு விமர்சனங்கள் இருந்த வண்ணமே உள்ளன. அட்லியின் முதல் படமான ராஜா ராணி வெளியான போது அதனை மணிரத்தினம் இயக்கிய மவுனராகம் படத்தோடு ஒப்பிட்டு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. பிறகு மெர்சல் படம் பார்த்த ரசிகர்கள்., அதனை கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்தின் காப்பி என்று விமர்சித்தனர். ஆனால் அட்லி தன் மீதான விமர்சனங்களுக்கு எப்போதும் செவி கொடுப்பதில்லை.

அட்லியின் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் பிகில் படம் வெளியாக உள்ள நிலையில்., உதவி இயக்குனர் செல்வா என்பவர் பிகில் படத்தின் கதை தன்னுடையது என வழக்கு தொடர்ந்திருக்கிறார். அவரது முகநூல் பக்கத்தில் அது தொடர்பாக சில காட்சிகளையும் எழுதி இருக்கிறார்.

அதில் ஒன்று ”ஒரு அண்ணன் தனது தங்கைக்கு காலணிகள் வாங்க அவளை கடைக்கு அழைத்துச் செல்கிறார். விலை அதிகமாக இருப்பதைப் பார்த்த தங்கை ‘அண்ணா எனக்கு இவ்ளோ காஸ்ட்லியா எல்லாம் ஷூ வேணாம்,’ என்று சொல்ல தங்கைக்காக அண்ணன் பீல் செய்கிறார். இப்படி ஒரு காட்சி தனது ஸ்கிரிப்டில் இருப்பதாகவும் அது திருடு போய் விட்டது போலவும் செல்வா கூறியிருப்பது நகைச்சுவையாக உள்ளது. இது தமிழ் சினிமாவின் ஆதிகால டெம்ப்ளேட் காட்சி என்பதைக் கூடவா நம்மாள் புரிந்து கொள்ள முடியாது.

காப்புரிமைச் சட்டத்தின் படி ஒரு படத்தில் தொடர்ந்து எட்டு காட்சிகள் உரிமை கோருகிறவரின் காட்சி அமைப்புடன் ஒத்துப் போனால் மட்டுமே அதனை திருட்டு என சொல்ல முடியும். மேலும் ஐடியாக்கள் என்பது வேறு கதை திருட்டு என்பது வேறு. உதாரணமாக அம்மா மகனிடம் ”இன்னைக்கு கறிக்குழம்பு வச்சிருக்கேன்., சாப்பிடுப்பா.” என்ற வசனத்துடன் ஒரு காட்சி வருமானால்., அதே போன்ற காட்சி இன்னொரு படத்திலும் இடம் பெறலாம் அதனை திருட்டு என்று சொல்ல முடியாது. இது பல கதைகளில் வரும் ஒரு எளிய காட்சி அவ்வளவு தான்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இந்திய சினிமாவில் இதுவரை நிரூபிக்கப்பட்ட கதைத் திருட்டு என்ற ஒன்று இல்லவே இல்லை. கற்பனை வறட்சி கொண்ட இன்றைய இயக்குனர்கள். இது என் கதை, இது நான் எழுதிய கதை என்றெல்லாம் சிறுவர்கள் போல அடித்துக் கொள்வது தமிழ் சினிமாவின் சாபக் கேடு.


வீடியோ :

 

 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close