Published : 19,Oct 2019 02:24 AM

அஜித்தின் 'வலிமை' படப்பிடிப்பு எப்போது ?

Ajith-s-Valimai-to-go-on-floors-from-December

இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’. இப்படம் வெளியாகி பரவலாக நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து அஜித்தின் 60வது படத்தையும் ஹெச்.வினோத்தான் இயக்குகிறார். இதையும் போனி கபூர்தான் தயாரிக்க உள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் இசையமைக்கிறார்.

Image

இந்நிலையில், படத்தின் பூஜை நேற்று போனி கபூரின் சென்னை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு, ‘வலிமை’ என பெயரிடப்பட்டுள்ளது. அஜித் படத்திற்கான தலைப்பு வெளியாகியுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் இந்திய அளவில் அதனை ட்ரெண்ட் செய்துள்ளனர்.

Image

இதற்கு முன்னர் ஒரு நடிகர் படத்தின் தலைப்பை வெளியிடாமல், படத்தின் எண்ணிக்கையை வைத்து தலைப்பு வெளியிட்டது அஜித் படத்தில் ஒன்றில் இருந்துதான். தற்போது அதை மாற்றும் விதமாக பூஜை அன்றே அஜித் படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேவையற்ற எதிர்பார்ப்பை உண்டாக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் தலைப்பு வெளியிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Image

மேலும், இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்தப்படம் 2020 ஆண்டு கோடையில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்