Published : 18,Oct 2019 05:41 AM

ஹரியானாவில் சோனியா காந்தியின் பரப்புரை திடீர் ரத்து

Sonia-Gandhi-s-rally-in-Haryana-has-been-cancelled

ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி பங்கேற்பதாக இருந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. 

ஹரியானா மாநிலத்தில் வரும் 21 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அங்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி அங்குள்ள மகேந்திரஹர் பகுதியில் நடைபெறும் தேர்தல் பரப்புரை பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்ட பின்பு, கலந்து கொள்ளும் முதல் பரப்புரை பொதுக்கூட்டம் என்பதால் பரபரப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் சோனியா காந்தியின் பரப்புரை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ராகுல் காந்தி இக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்