Published : 17,Oct 2019 03:17 AM
கல்கி ஆசிரமம் ஆப்ரிக்காவில் இடம் வாங்கியதா ?

கல்கி ஆசிரமத்தில் நடத்தப்பட்டு வரும் வருமான வரித்துறை சோதனையில் இதுவரை 33 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் உள்ள 40 இடங்களில் 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கல்கி மகன் கிருஷ்ணனின் கோவர்த்தனபுரம் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. ஒட்டுமொத்த சோதனையில் 24 கோடி ரூபாயும், 9 கோடி ரூபாய் மதிப்புடைய வெளிநாட்டு பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும், வருமானத்தை கணக்கில் காட்டாமல் வாங்கப்பட்ட சொத்துக்கள் குறித்தும், தமிழகம் மற்றும் ஆப்ரிக்காவில் அதிக அளவு இடம் வாங்கியதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.