Published : 24,May 2017 02:41 AM

இனி கோடை விடுமுறையிலும் மாணவர்களுக்கு சத்துணவு

nutritious-food-in-schools

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில், கோடை விடுமுறையிலும் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்ற ஆணைப்படி, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தின்கீழ் செயல்படும் அனைத்து சத்துணவு மையங்களிலும், கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் ஆகியோர்களுக்கு ஆய்வுக் கூட்டம் நடத்தி, விருப்பமுள்ள அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மத்திய அரசின் நடைமுறையும், 9 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாநில அரசின் நடைமுறையும் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிய உணவு வகைகள் வழக்கமான நடைமுறையில் வழங்க வேண்டும் என்றும், சத்துணவு மையங்களில் தேவையான உணவுப் பொருட்கள் இல்லாத பட்சத்தில் உடனடியாக நுகர்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில், கோடை விடுமுறையிலும் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்