கல்கி ஆசிரம சோதனையில் ரூ20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை அதிகாரிகள்

கல்கி ஆசிரம சோதனையில் ரூ20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை அதிகாரிகள்
கல்கி ஆசிரம சோதனையில் ரூ20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை அதிகாரிகள்

கல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையில் 20 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

சாமியார் கல்கி பகவானுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக இன்று சோதனையில் ஈடுபட்டனர். கல்கி ப‌கவானும் அவரது மனைவி அம்மா பகவானும் ஆன்மீக சொற்பொழிவுகள் நிகழ்த்தி வருகின்றனர். அவர்களுக்கு ஏராளமான பக்தர்கள் உண்டு. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கல்கி பகவானின் ஆசிரமம் உள்ளது. ஆசிரமத்திற்கு சொந்தமாக பள்ளிகள் உள்ளன. ஆந்திரா, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான அலுவலகங்கள் உள்ளன.

இந்தச் சோதனையில் 400க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இச்சோதனையில் 20 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். வருமானத்தை கணக்கில் காட்டாமல் கல்கி சொத்துகள் வாங்கியதும் இந்தச் சோதனையின் மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன் இவர் தமிழ்நாடு, ஆப்பிரிக்கா உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் நிலம் வாங்கியதும் தெரியவந்துள்ளது என வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். அத்துடன் கல்கி சாமியாருக்கு சொந்தமான ஆந்திர மாநிலம் சித்தூர் ஆசிரமத்தில் இன்னும் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com