[X] Close

தீவிரவாத நிலைகளைத் தாக்கி அழித்த இந்திய ராணுவம்: பாக்., மறுப்பு

indian-army-attack-pakistan-boarder

எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதி அருகே பாகிஸ்தானின் தீவிரவாத நிலைகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி அழித்துள்ளது.


Advertisement

முதல் முறையாக இதுபோன்ற தாக்குதலின் வீடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது. ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் நவ்ஷோரா பகுதியில் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதி அருகே ஊடுருவலை தடுக்க இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

ஜம்மு, காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவி இந்திய இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச்செல்வதை தடுக்க இந்த நடவடிக்கை அவசியமாகிறது என்று அமைச்சர் பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். ஆனால் இதுபோன்ற எந்த தாக்குதலையும் நடத்தவில்லை என்று பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது.


Advertisement

இதுகுறித்து இந்திய ராணுவ தளபதி அசோக் நெரூலா கூறுகையில், ’ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதியையும், சமாதானத்தையும் நிலைநிறுத்துவதற்காக எல்லைக்கட்டுப்பட்டு கோட்டு பகுதியின் அருகே ஊடுருவல்களை தடுப்பது மிகவும் அவசியமாகிறது. ஜம்மு, காஷ்மீரில் ஊடுருவும் தீவிரவாதிகளின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம், இம்மாநில இளைஞர்கள் தீவிரவாதிகளால் கவரப்படுவதை தடுக்க வேண்டியது அவசியமாகிறது’ என்று அவர் தெரிவித்தார்.


Advertisement

Advertisement
[X] Close