Published : 15,Oct 2019 03:01 PM
எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகம் சார்பில் முதல்வருக்கு ‘கௌரவ டாக்டர் பட்டம்’

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளதாக எம்.ஜி.ஆர் நிகர்நிலைப் பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
பல்வேறு துறைகளில் பங்காற்றியவர்களுக்கு பல்கலைக் கழகங்கள் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவது வழக்கம். அரசியல் தலைவர்கள் பலருக்கும் அவ்வவ்போது இந்தப் பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட பலருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வரிசையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளதாக எம்.ஜி.ஆர் நிகர்நிலைப் பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளதாக பல்கலைக் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் எம்பியுமான ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் இந்த கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
Dr MGR Educational & Research Institute -- founded by AC Shanmugam is conferring an honorary D.Litt (doctor) degree on TN CM EPS @CMOTamilNadu on Oct 20 @xpresstn@NewIndianXpresspic.twitter.com/koEUDLkEyT
— T Muruganandham (@muruga_TNIE) October 15, 2019