[X] Close

என்எல்சிக்கு பயன்படுத்தும் ஆயிலில் கலப்படம்.. இருவர் கைது..!

Adulteration-in-Neyveli-NLC-Oil-2-persons-arrested

நெய்வேலி என்எல்சி அனல்மின் நிலையத்தில் எரிபொருளாக பயன்படுத்தும் பர்னஸ் ஆயில் உடன் தண்ணீர் கலப்படம் செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


Advertisement

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு, மின் உற்பத்திக்காக சென்னை ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் இருந்து பர்னஸ் ஆயில் கொண்டுவரப்படுகிறது. இதனிடையே பர்னஸ் ஆயில் உடன் தண்ணீர் கலந்து கொண்டு வரப்படுவதாக என்எல்சி விஜிலன்ஸ்க்கு  ரகசிய  தகவல் கிடைத்ததை அடுத்து என்எல்சி விஜிலன்ஸ் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். 


Advertisement

இந்தச் சோதனையில் சென்னையை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற ஓட்டுநர் ஓட்டி வந்த லாரியில், பர்னஸ் ஆயிலில் பாதியளவு தண்ணீர் கலந்து இருந்தது தெரியவந்தது. இதனால் விஜிலன்ஸ் துறையினர் கொடுத்த புகாரின் பேரில் நெய்வேலி தர்மல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வன் மற்றும் கிளீனர் அஜித் குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கலப்பட பர்னஸ் ஆயில் தொடர்பாக அதிகாரிகளுக்கும் தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close