[X] Close

பெண் காவல் அதிகாரியுடன் ‘மீரா மிதுன்’ வாக்குவாதம் - ஆடியோ..!

Model-Meera-Mithun-argue-with-Police-officer-in-Phone-Call

காவல் அதிகாரி என போன் செய்து பேசிய பெண்ணுடன் மாடல் மீரா மிதுன் வாக்குவாதம் செய்யும் ஆடியோ வெளியாகியுள்ளது.


Advertisement

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மீரா மிதுனின் புதிய ஆடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே, பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது வெளியான அவரது ஆடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது அடுத்தடுத்த ஆடியோக்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. 


Advertisement

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஒரு ஆடியோவில், பெண் ஒருவர் தான் ஒரு காவல்துறை துணை ஆய்வாளர் என பேசுகிறார். மீரா மிதுனின் வக்கீல் வந்து தன்னிடம் பேசியதாக கூறி, ஒரு விஷயத்தை கூற முயற்சிக்கிறார். ஆனால் அவரிடம் நீங்கள் போலீஸ் தானா, ஐடி கார்டை அனுப்புங்கள் என ஆரம்பம் முதலே வாக்குவத்தில் மீரா மிதுன் ஈடுபடுகிறார். 

இவருக்கும் இடையே பேச்சுவார்த்தை அதிகரிக்கிறது. ஒரு கட்டத்தில் போன் செய்த பெண், தான் காவல்துறை ரீதியில் செய்ய வேண்டியவற்றை செய்வதாக கூறுகிறார். அதற்கு மீராது மிதுன், என்னை மிரட்டுகிறீர்களா ? இந்த ஆடியோவை உங்கள் உயர் அதிகாரிகளுக்கு அனுப்புகிறேன் எனக்கூறி வாதிடுகிறார்.


Advertisement

Advertisement
[X] Close