ஏவுகணைச் சோதனைகளைத் தொடரப் போவதாக, ஈரானில் மீண்டும் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஹசன் ரொஹானி அறிவித்திருக்கிறார்.
ஈரான் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஹசன் ரொஹானி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். மீண்டும் அதிபரான பிறகு முதல் முறையாகச் செய்தியாளர்களைச் சந்தித்த ரொஹானி, ஏவுகணைச் சோதனைகளைத் தொடரப் போவதாக அறிவித்துள்ளார். சவுதி அரேபியாவுக்கு ட்ரம்ப் மேற்கொண்ட பயணம் எந்த வகையிலும் உதவாத வெற்றுக்காட்சி என்று அப்போது அவர் கூறினார். சவுதி அரேபியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்டிருக்கும் பல ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுத உடன்பாட்டையும் ரொஹானி குறை கூறினார்.
இந்நிலையில், ஈரான் அணு ஆயுதங்களை வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படாது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இஸ்ரேல் பிரதமரிடம் உறுதியளித்துள்ளார். இஸ்ரேல் சென்றுள்ள டிரம்ப் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு இணைந்து செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார். அப்போது, 2015-ம் ஆண்டு உலக நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதில் இருந்து ஈரான் நினைத்ததை எல்லாம் செய்யலாம் என எண்ணி உள்ளது. ஈரான் பெரிய அளவில் நிதி அளித்து தீவிரவாதிகள் மற்றும் போராளிகளுக்கு பயிற்சி அளிப்பதுடன் ஆயுத உதவிகளையும் செய்து வருகிறது என அவர் குற்றம்சாட்டினார்.
Loading More post
”அடுத்த சீசனில் இந்த இளம் பவுலர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” - தோனி சொன்ன அந்த வீரர்?
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?
லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!