Published : 13,Oct 2019 03:22 PM

திருச்சி நகைக் கொள்ளை : மேலும் 6 கிலோ தங்கம் பறிமுதல்

police-seized-6-kg-gold-in-madurai

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் மேலும் 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2-ஆம் தேதி திருச்சி லலிதா ஜூவல்லரி சுவரில் துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. பிரபல வங்கிக் கொள்ளையன் திருவாரூர் முருகன் லலிதா ஜுவல்லரியில் கைவரிசை காட்டியது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. 7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடிய காவல்துறையினர் மணிகண்டன் என்பவரை அக்டோபர் 3-ஆம் தேதி கைது செய்தனர். அவரிடமிருந்து 5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மணிகண்டனோடு இருசக்கர வாகனத்தில் சென்ற சுரேஷ் தப்பியோடிவிட்டார். இவர் திருவாரூர் முருகனின் சகோதரி கனகவல்லியின் மகன் ஆவார். இதனையடுத்து கனகவல்லியை கைது செய்த‌ காவல்துறையினர் சுரேஷை தேடி வந்தனர். இதைத்தொடர்ந்து  செங்கம் நீதிமன்றத்தில் சுரேஷ் சரணடைந்தார். அதேபோல, திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் கொள்ளையர்களுக்கு திட்டம் வகுத்து தந்த முருகன் பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனிடையே 11 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்த கொள்ளை வழக்கில் மேலும் 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான முருகன் அளித்த தகவலின் பேரில் மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த கணேசன் என்பவரிடமிருந்து 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை பதுக்கி வைத்திருந்த கணேசனை போலீசார் கைது செய்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்