இந்திய அணியுடனான 2 வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி, புனேவில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. மயங்க் அகர்வால் 108 ரன்களும் ரவீந்திர ஜடேஜா 91 ரன்களும் எடுத்தனர். கேப்டன் விராத் கோலி 254 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 275 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. 8 விக்கெட்டுக்கு 162 ரன்களுடன் தடுமாறிய அந்த அணியின் ஸ்கோரை, 9-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பிலாண்டரும், கேஷவ் மகராஜூம் உயர்த்தினர். பொறுமையாக ஆடிய அவர்கள் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவால் அளித்தனர்.
72 ரன்கள் சேர்த்த கேசவ் மகராஜை, அஷ்வின் வெளியேற்றினார். அடுத்து வந்த ரபாடா, அஷ்வின் பந்துவீச்சில் 2 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்கா, 275 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பிலாண்டர் 44 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
இந்திய தரப்பில் அஷ்வின் 4 விக்கெட்களையும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். முதல் இன்னிங்சில் 326 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, நான்காம் நாளான இன்று தென்னாப்பிரிக்காவுக்கு பாலோ ஆன் வழங்கியது.
இதையடுத்து தென்னாப்பிரிக்க வீரர் மார்க்ரமும் டீன் எல்கரும் களமிறங்கினர். முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே மார்க்ரமை எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்க செய்தார் இஷாந்த் சர்மா. இதையடுத்து புருயின், எல்கருடன் இணைந்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே புருயின் விக்கெட்டை வீழ்த்தினார் உமேஷ் யாதவ். அவர் 8 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த கேப்டன் டுபிளிசிஸும் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் விக்கெட்டையும் அஸ்வின் சாய்த்தார். அவரது அடுத்த ஓவரில் டீன் எல்கர் 48 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் 71 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து அந்த அணி தடுமாறிக் கொண்டிருந்தது. பின்னர் பவுமாவும் முத்துசாமியும் நின்று போராடினர். ஆனால், பவுமா (38) விக்கெட்டை வீழ்த்தினார் ஜடேஜா. அடுத்து முகமது ஷமி பந்துவீச்சில் முத்துசாமி அவுட் ஆக, தென்னாப்பிரிக்காவின் நம்பிக்கை தகர்ந்தது.
டிரிங்ஸ் இடைவேளை வரை 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்துள்ளது அந்த அணி. பிலாண்டர் 29 ரன்களுடனும் மகரா ஜ் 17 ரன்களுடன் களத்தில் உள்ளனர். தென்னாப்பிரிக்க அணி, இன்னும் 154 ரன்கள் பின் தங்கிய நிலையில் இருக்கிறது. இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 3 விக்கெட்டுகள் தேவை.
Loading More post
இப்படி ஒரு சாண்ட்விச்சா? எப்பா ஆள விடுங்க - அலறும் Foodies; வீடியோ பகிர்ந்த ஒமர் அப்துல்லா
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'