Published : 13,Oct 2019 08:58 AM
திமுகவில் உதயமாகிறது இளம் பெண்கள் பேரவை?

திமுகவில் இளம் பெண்கள் பேரவை என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கட்டுப்பாட்டின் கீழ் இளம் பெண்கள் பேரவை செயல்படும் என்றும், இம்மாத இறுதியில் அது தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
முற்போக்கு சிந்தனையுடன் களத்தில் பணியாற்றக்கூடிய இளம் பெண்கள் 7 பேரை மாநில துணை செயலாளர்களாக தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.