[X] Close

நடிகை அமிஷா படேலுக்கு பிடி வாரன்ட்!

Ranchi-court-issues-arrest-warrant-against-actress-Amisha-patel

ரூ.2.5 கோடி கடனை திருப்பிக் கொடுக்காத வழக்கில் நடிகை அமிஷா படேலுக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பிரபல இந்தி நடிகை அமிஷா படேல். இவர் தமிழில் விஜய் நடித்த ’புதிய கீதை’ படத்தில் நடித்திருந்தார். இவரும் இவரது பார்ட்னர் குணாலும் இணைந்து ’தேசி மேஜிக்’ என்ற படத்தைத் தயாரித்தனர். இந்தப் படத்துக்காக, ராஞ்சியைச் சேர்ந்த  தயாரிப்பாளர் அஜய்குமார் சிங்கிடம் இவர்கள் ரூ.2.5 கோடி கடன் வாங்கி இருந்தனர். இதை 10 சதவிகித வட்டியுடன் திருப்பித் தருவதாகக் கூறியிருந்தனர். ஆனால் சொன்னபடி பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை. இதுகுறித்து சிங் கேட்டபோது அவர்கள் சரியாகப் பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 


Advertisement

இதனால் ராஞ்சி, சிவில் நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிராக, அஜய் குமார் சிங் வழக்குத் தொடந்தார். இந்த வழக்கில் ஆஜராகக் கோரி, பலமுறை அமிஷா படேலுக்கு சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை என்பதால், அவருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ராஞ்சி போலீசார், அமிஷா படேலை கைது செய்ய மும்பை விரைந் துள்ளனர்.


Advertisement

Advertisement
[X] Close