சீன அதிபர் ஸி ஜின்பிங்கின் மாமல்லபுர பயணத் திட்டம் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
சீன அதிபர் ஸி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பையொட்டி சென்னை புதுப்பொலிவு பெற்றுள்ளது. மேலும் சந்திப்பு நடைபெறவுள்ள மாமல்லபுரம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்நிலையில் சீன அதிபரின் பயணத்திடம் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சீன அதிபர் ஸி ஜின்பிங் தனி விமான மூலம் நண்பகல் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கு அவரை வரவேற்கும் விதமாக நடைபெறும் கலைநிகழ்ச்சிகளை சுமார் 15 நிமிடங்கள் காண உள்ளார். 1.45 மணிக்கு கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதிக்கு சாலைமார்க்கமாக செல்லும் அவர் 2.05 மணிக்கு அங்கு சென்றடைகிறார்.
மாலை 4 மணிக்கு கிண்டியிலிருந்து புறப்படும் சீன அதிபர் ஷி ஜின்பிங் 4.55 மணிக்கு மகாபலிபுரம் சென்றடைகிறார். சரியாக 5 மணிக்கு சீன அதிபரை பிரதமர் மோடி வரவேற்கிறார். பின்னர் 5 மணி முதல் 6 மணி வரை அங்குள்ள 3 புரதான சின்னங்களை இரு தலைவர்களும் இணைந்து பார்வையிடுகின்றனர்.
அடுத்ததாக 6 மணி முதல் 6.30 வரை பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் இருவரும் கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசிக்க உள்ளனர். மாலை 6.45 மணி முதல் இரவு 8 மணி வரை பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஆகிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதுடன் இரவு உணவையும் உட்கொள்கின்றனர்.
பின்னர், இரவு 8.05 மணிக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் மகாபலிபுரத்தில் இருந்து புறப்படுகின்றனர். சீன அதிபர் இரவு 9 மணிக்கு கிண்டியிலுள்ள ஐடிசி கிராண்ட் சோழா விடுதிக்கு சென்றடைகிறார்.
சனிக்கிழமை காலை 9.05 மணிக்கு கிண்டி சோழா நட்சத்திர விடுதியிலிருந்து புறப்படும் சீன அதிபர் ஷி ஜின்பிங், 9.50 மணிக்கு பிரதமர் மோடி தங்கியுள்ள நட்சத்திர விடுதிக்கு சென்றடைகிறார். இதனையடுத்து 10 மணி முதல் 40 நிமிடங்கள் அதாவது 10.40 மணி வரை இருவரும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
பின்னர் 10.50 முதல் 11.40 வரை தாஜ் நட்சத்திர விடுதியில் தலைவர்கள் இருவரின் அதிகாரிகள் குழு பேச்சுவார்த்தை நடத்துகிறது. அடுத்ததாக 11.45 மணி முதல் 12.45 மணி வரை சீன அதிபருக்கு பிரதமர் மோடி மதிய விருந்து அளிக்கிறார்.
உடனே அங்கிருந்து புறப்படும் சீன அதிபர் சாலை மார்க்கமாக நண்பகல் 1.25 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து சரியாக 1.30 மணிக்கு தமிழக பயணத்தை முடித்துக்கொண்டு சீன அதிபர் ஷி ஜின்பிங் புறப்படுகிறார்.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?