சீன அதிபருக்காக வந்திருக்கும் சொகுசு காரின் சிறப்பம்சங்கள்

சீன அதிபருக்காக வந்திருக்கும் சொகுசு காரின் சிறப்பம்சங்கள்
சீன அதிபருக்காக வந்திருக்கும் சொகுசு காரின் சிறப்பம்சங்கள்

இந்தியா வரும் சீன அதிபர் ஷி ஜின்பிங் பயணத்துக்காக 4 சொகுசு கார்கள் சிறப்பு விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வந்து இறங்கியுள்ளன.

சீன அதிபர் ஷி ஜின்பிங் எந்த நாட்டுக்குச் சென்றாலும் சீன அரசு வழங்கிய காரை பயன்படுத்துவதையே வழக்கமாக கொண்டுள்ளார். அதிபர் பயணிக்கும் அந்த காரை சீனாவை சேர்ந்த FAW என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. சீன அதிபர் பயணிக்கும் ஹாங்கி எல் 5 ரகத்தைச் சேர்ந்த கார் கறுப்பு நிறமுடையது ஹாங்கி என்பதற்கு சீன மொழியில் சிவப்புக் கொடி என்பது பொருளாகும். 

சீனாவில் மிக விலையுயர்ந்த காராக பார்க்கப்படும் இந்தக் கார் அந்நாட்டு அரசுக்காக மட்டும் பிரத்யேகமாக தயாரிக்கப்படுகிறது. ஹாங்கி எல் 5 ரக காரில் 408 குதிரைத்திறன் கொண்ட இன்ஜின் மற்றும் 6 ஸ்பீட் கியர் பாக்ஸ் ஆகியவை உள்ளன. இந்த சொகுசு காரின் விலை 5 கோடியே 60 லட்சமாகும் 3 ஆயிரத்து 150 கிலோ எடைகொண்ட இந்த சொகுசு கார் 2 மீட்டர் அகலமும், 1.5 மீட்டர் உயரமும் கொண்டது. 

இந்த கார் 10 விநாடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும். ஹாங்கி எல் 5 ரக காரில் 105 லிட்டர் பெட்ரோல் அல்லது கேஸை நிரப்பிக்கொள்ளலாம். ஒரு முறை பெட்ரோல் நிரப்பினால் 500 மைல்கள் வரை பயணிக்க முடியும். காரில் ஏசி, அதிவேகத்தில் செயல்படும் தொலைத்தொடர்பு கருவிகள் மற்றும் செயற்கைக்கோள் தொலைபேசி போன்ற வசதிகள் உள்ளன. காரில் உள்ள அனைத்து கதவுகளும், கண்ணாடிகளும் துப்பாக்கி குண்டு துளைக்காத வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com