Published : 08,Oct 2019 12:41 PM

உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி: காலியிறுதியில் மேரி கோம் !

World-Boxing-Championships--Mary-Kom-enters-quarterfinals

இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். 

உலக சாம்பியன்ஷிப் குத்து சண்டை போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் மகளிருக்கான 51 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் எம்.சி.மேரி கோம் பங்கேற்றுள்ளார். இந்தத் தொடரின் முதல் சுற்றில் அவருக்கு பை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று அவர் இரண்டாவது சுற்றுப் போட்டியில் பங்கேற்றார். 

இந்தச் சுற்றில் அவர் தாய்லாந்து நாட்டின் ஜூடாமஸ் ஜிட்போங்கை எதிர்கொண்டார். இப்போட்டியில் அசத்தலாக விளையாடிய மேரி கோம் 5-0 என்ற கணக்கில் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தினார். இதன்மூலம் அவர் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மேரி கோம் ஏற்கெனவே 6 முறை உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்