ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்படும் குடிநீர் சேவை திட்டம் இன்றுடன் நிறுத்தப்படுகிறது.
கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் கீழ், கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்தடைந்துள்ளது. விரைவில் இந்தத் தண்ணீரை புழல் ஏரிக்கு பிரித்து அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய எரிகளின் மொத்த நீர் இருப்பு 899 மில்லியன் கனஅடியாக உள்ளது.
வடகிழக்குப் பருவ மழையும் நெருங்கி வரும் சூழலில், சென்னை ஏரிகளில் உள்ள நீர் இருப்பு மேலும் அதிகரித்து சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக நிரம்பும். இதனால் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டுவரும் குடிநீர் திட்டத்தை கைவிட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் கொண்டுவரப்படும் குடிநீர் சேவை நிறுத்தப்படுகிறது. இன்றைய கணக்குப்படி 159வது ரயிலுடன் 39 கோடியே 25 லட்சம் லிட்டர் தண்ணீர் ரயில் மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 12ஆம் தேதியிலிருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Loading More post
காஷ்மீர்: தொலைக்காட்சி நடிகையை கொன்ற 2 தீவிரவாதிகள் 24 மணிநேரத்தில் சுட்டுக்கொலை
“நாடாளுமன்ற நடவடிக்கையில் சிபிஐ தலையிடுகிறது” - சபாநாயகருக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம்
பறிமுதல் செய்ய வந்த அதிகாரிகள்.. நகர மறுத்து அடம்பிடித்த ரூபாலி யானை.. நெகிழ்ச்சி சம்பவம்
டிஎன்பிஎஸ்சி கட்டாயத் தமிழ் தேர்வு - மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு
’மோடிக்கு 17 கேள்விகளுடன் பேனர்கள்’.. 2வது முறையாக பிரதமரின் நிகழ்ச்சியை தவிர்த்த கேசிஆர்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!