விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 12 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
விஜய், நயன்தாரா, விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி உட்பட பலர் நடித்துள்ள படம், ’பிகில்’. ஏஜிஎஸ் என்டர் டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசைமைத்துள்ளார். தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகிறது. இதற்கிடையே படத்தின் டிரைலரை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் இன்னும் டிரைலர் வெளியாகவில்லை.
இந்தப் படத்தின் டிரைலர் அக்டோபர் 4ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், ட்ரெய்லர் வெளியாகவில்லை. ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அடுத்த அப்டேப் எப்போது என ட்விட்டரில் ஹேஷ்டேக் போட்டு கேள்வி எழுப்பும் அளவிற்கு சென்றுவிட்டனர். ஒலி வடிவமைப்பில் திருப்தி இல்லாததால் அதனை மேலும் மெருகேற்ற அட்லி விரும்பியதால் இந்த தாமதம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது.
தீபாவளிக்கு இன்னும் 22 நாட்களே உள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இரண்டாவது வாரம் தணிக்கைக் குழுவுக்கு படம் அனுப்பட வேண்டும் என்பதால், அதற்காக முழு வீச்சில் படக்குழு பணியாற்றி வருகிறது. அதோடு மதுரை மற்றும் விசாகப்பட்டினத்தில் படத்துக்காக சில பேட்ச் ஒர்க் வேலைகளும் நடக்கின்றன.
இந்நிலையில், பிகில் படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 12 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Get ready for the Meratal trailer of our Thalapathy’s #Bigil @Ags_production @Atlee_dir @arrahman #Nayanthara @am_kathir @dop_gkvishnu @Lyricist_Vivek @muthurajthangvl @Screensceneoffl @SonyMusicSouth #PodraVediya #BigilTrailer pic.twitter.com/eltZwHnH2U — Archana Kalpathi (@archanakalpathi) October 7, 2019
Loading More post
சர்வதேச பத்திரிகை புகைப்படக் கலைஞர் விருது பெற்ற மதுரைக்காரர்: யார் அவர்? என்ன சாதனை?
நெல்லை கல்குவாரி விபத்து: பெரும் போராட்டத்துக்குப் பின் 4-வது நபர் சடலமாக மீட்பு
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?