[X] Close

இந்த பாட்டி யாருன்னு தெரியுதா?

Nita-ambani-s-mother-prays-during-match

மும்பை-புனே அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் பல ரசிகர்கள், தங்கள் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்ட காட்சிகளை சேனலில் பார்க்க முடிந்தது.


Advertisement

புனே அணி வீரர்கள் சிக்சரும் பவுண்டரிகளாகவும் விளாசும் போது மும்பை ரசிகர்கள், கண்ணை மூடிக்கொண்டு வேண்டிக்கொண்டிருந்தனர். அதில் அந்த அணியின் உரிமையாளரான நீடா அம்பானியும் ஒருவர்.

புனே அணி ரசிகர்களும் அப்படியே. அந்த அணியின் உரிமையாளர் கோயங்கா, கண்ணை மூடிக்கொண்டு சாமி கும்பிட்டதை அந்த விளையாட்டுச் சேனல் விளையாட்டுத்தனமாக காண்பித்துக்கொண்டே இருந்தது. இப்படி கண்மூடி வேண்டியவர்களில் அதிகம் கவர்ந்தவர் படத்தில் இருக்கிற இந்த பாட்டிதான்.


Advertisement

கடைசி ஓவரில் 4 பந்தில் புனே அணிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இந்தப் பாட்டியின் பிரார்த்தனையை அதிகமாகக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள் சேனலில். பிறகு ஒரு ரன்னில் மும்பை போராடி வெல்ல, பாட்டிக்கு சிரிப்பை பார்க்க வேண்டுமே!

ஆங்... இந்தப் பாட்டி வேறு யாருமில்லை. மும்பை அணி உரிமையாளர் நீடா அம்பானியின் அம்மா!

’மும்பை ஜெயிக்க இந்த பாட்டிதாம்பா காரணம். மேன் ஆப் த மேட்ச் இவங்களுக்குத்தான் கொடுக்கணும்’ என்று கலாய்க்கிறார்கள் சமூகவலைத்தளங்களில்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close