Published : 23,May 2017 04:29 AM

காமெடி நடிகர் மீது மனைவி புகார்

Comedy-actor-Balaji-tortures-wife

தன்னைக் கொடுமை படுத்துவதாக காமெடி நடிகர் பாலாஜி மீது அவர் மனைவி புகார் செய்துள்ளார்.

சென்னை, மாதவரத்தில் வசித்து வருபவர் காமெடி நடிகர் பாலாஜி. இவர் மனைவி நித்யா. இருவரும், காதலித்து சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு போர்ஷிகா என்ற மகள் இருக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக, சில மாதங்களாக இருவருக்கும் பிரச்னை. இந்நிலையில் நித்யா, மாதவரம் போலீசில் பாலாஜி மீது நேற்று திடீரென்று புகார் செய்தார். அதில், தன் சமுதாயத்தை பற்றி பாலாஜி தரக்குறைவாகப் பேசுவதாகவும் தன்னை கொடுமை செய்வதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்