[X] Close

நாயை கண்டுபிடிக்க 4 தனிப்படை!

Chandigarh-police-launch-massive-investigation-to-track-down-Judge-s-dog

காணாமல் போன வி.ஜ.பி. ஒருவரின் நாயை கண்டுபிடிக்க நான்கு தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடிய சம்பவம் சண்டிகரில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

சண்டிகர் நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதி ஒருவரின் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த MOGAMBO வகையைச் சேர்ந்த 6 மாத நாய்க் குட்டி, 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போனது. இதுகுறித்து காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரையடுத்து, நாய் காணாமல் போனது பற்றி எப்.ஐ.ஆர். பதிவு செய்து, நான்கு படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், நீதிபதிகளின் குடியிருப்பின் கொல்லைப்புறத்தில் இருந்த அந்த நாய், தற்போது வீட்டிற்குத் திரும்பியுள்ளது. பள்ளி மாணவர்கள் நாய்க் குட்டியை திருடிச் சென்றிருப்பதாகச் சந்தேகப்பட்டு, அருகில் இருந்த பள்ளியொன்றில் போலீசார் சோதனை செய்ததும், அப்பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து தேடுதல் வேட்டையும் நடத்தியுள்ளனர்.


Advertisement

வி.ஜ.பி. ஒருவர் வீட்டின் நாய் காணாமல் போனதும், காவல்துறையினர் அதை தேடி அலைந்து திரிந்த சம்பவத்தை சண்டிகர் மக்கள் பரபரப்பாகப் பேசி வருகின்றனர்.

Related Tags : police fir ivestigation missing dog

Advertisement

Advertisement
[X] Close