திருச்சி நகைக் கொள்ளையில் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

திருச்சி நகைக் கொள்ளையில் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு!
திருச்சி நகைக் கொள்ளையில் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

திருச்சி லலிதா ஜூவல்லரியில் ரூ.13 கோடி நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

நகைகளை அள்ளிச்செல்லும் கொள்ளையர்கள் அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்த இக்காலகட்டத்தில், கொள்ளை சம்பவங்களை கண்டறிய காவல்துறைக்கு உதவியாக இருப்பது சிசிடிவி கேமரா. அதனால் தான், கொள்ளையடிக்கச் செல்லும்போது, அந்த இடங்களில் உள்ள கேமராவை சேதப்படுத்துவது தான், திருடர்களின் முதல் வேலையாக இருக்கும். ஆனால் திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையில் நடந்திருப்பதோ வேறு. சிசிடிவி கேமரா இருப்பது தெரிந்தும் பயப்படாத கொள்ளையர்கள், சாவகாசமாக கொள்ளையடித்துவிட்டு சென்றிருக்கிறார்கள். 

கடையின் தரைத்தளத்தில் உள்ள அறையில் சத்தமில்லாமல் உள்ளே நுழையும் கொள்ளையன், அங்கு சுற்றிப் பார்த்து சிசிடிவி கேமரா இருக்கிறதா என நோட்டமிடுகிறார். பின்னர், கிழே அமர்ந்து கொண்ட அவர், நீளமான ஸ்க்ரூ ட்ரைவர் ஒன்றை எடுத்து ஷோக்கேஸின் பூட்டை லாவகமாக உடைக்கிறா‌ர். அந்த நபரின் கை பட்டதும் கன நொடியில் திறந்து கொண்டது ஷோக்கேஸ் கண்ணாடி. பின்னர் ஒவ்வொரு நகையாக, வெளியே எடுத்த கொள்ளையன், தன்னோடு எடுத்துவந்த பையில் அதைப் போட்டுக் கொண்டார். 

மற்ற ஷோக்கேஸ்களின் சாவி ஏதேனும் இருக்கிறதா என கண்டுபிடிக்க, கல்லா பெட்டி இருக்கும் இடத்திற்குச் சென்றார் அந்த நபர். அவரால், கல்லா பெட்டியை உடைக்க முடியவில்லை. இந்த நேரத்தில்தான் அந்த அறைக்குள் என்ட்ரி ஆனார் மற்றொரு கொள்ளையன். தன்னுடன் 2 பைகளை எடுத்துவந்த அவர், முதலில் வந்த கொள்ளையனுக்கு உதவியாக எஞ்சிய நகைகளை வாரி சுருட்டிக் கொண்டார். இவ்விருவரிடம் கவனிக்கத்தக்க ஒரு விஷயம் என்னவென்றால், அவர்களின் இடுப்பில் கட்டியிருந்த கயிறுதான். வெளியே இருந்த நபர்கள் அந்த கயிறை இழுத்துதான், உள்ளே இருந்த கொள்ளையர்களுக்கு சிக்னல் கொடுத்திருக்கிறார்கள். 

சென்ற இடங்களுக்கெல்லாம் அந்த கயிறை விடாமல் பிடித்துக் கொண்ட கொள்ளையர்கள், அதனை ஒரு தகவல் பரிமாறிக் கொள்ளும் கருவியாகவே பயன்படுத்தி இருக்கிறார்கள். இறுதியாக நகைப் பைகளை எடுத்துக் கொண்டு சத்தமில்லாமல் செல்லும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. எவ்வித பதற்றமோ, பரபரப்போ இல்லாமல், கண் இமைக் கும் நொடியில் பூட்டை உடைத்த ஸ்டைலே, அவர்கள் நிச்சயம் தொழில்முறை கொள்ளையர்களாகத்தான் இருக்க முடியும் என்கிறது காவல்துறை. 

பொம்மை முகமூடி அணிந்திருந்தால் என்ன? கொள்ளையர்களின் உண்மை முகத்தை கண்டுபிடிக்காமல் விடமாட்டோம் என விசாரணையை துரிதப்படுத்தியிருக்கிறது காவல்துறை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com