[X] Close

ஜவுளிக் கடை அதிபருடன் நடிக்கிறேனா? ஹன்சிகா மறுப்பு

Hansika-refuses-to-romance-Saravana-stores-owner

சரவணா ஸ்டோர்ஸ் அதிபருடன் நடிக்க இருப்பதாக வரும் தகவல்களை, நடிகை ஹன்சிகா மறுத்துள்ளார்.

சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் அருள், ஹீரோவாக அறிமுகமாகிறார். அந்த நிறுவனத்தில் விளம்பரப் படங்களில் விதவிதமாக வந்த அவர் வெள்ளித் திரையில் வருகிறார். அவர் நடித்த விளம்பர படங்களை இயக்கிய, இரட்டை இயக்குனர் களான ஜேடி-ஜெர்ரி இயக்குகின்றனர். இவர்கள் ஏற்கனவே, விக்ரம், அஜீத் நடித்த ’உல்லாசம்’, விக்ரமாதித்யா, ஷெரின் நடித்த ’விசில்’ படங்களை இயக்கியவர்கள்.

இப்போது இவர்கள் இயக்கும் படம் பேண்டஸி கதையை கொண்டது என்று கூறப்படுகிறது. இதற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். ஹீரோவாக நடிக்கும் சரவணனே தயாரிக்கிறார். இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் படம் பற்றிய அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட இருக்கிறது.


Advertisement

இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க பல்வேறு நடிகைகளிடம் பேசி வந்ததாகவும் இறுதியில் ஹன்சிகா ஒப்பந்தம் ஆகி இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.  ஹன்சிகா, சரவணா ஸ்டோர்ஸ் விளம்பர படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இந்த தகவலை ஹன்சிகா மறுத்துள்ளார். இது தவறான தகவல் என்று ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close