[X] Close

அதிமுக பொதுச்செயலாளர் பதவி விவகாரம்: சசிகலா தரப்பில் பத்திரங்கள் தாக்கல்

Election-commission-sasikala

அதிமுக பொதுச் செயலாளர் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தில் சசிகலா அணி தரப்பில் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


Advertisement

12 ஆயிரத்து 752  பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றில் மாவட்ட நிர்வாகிகளின் கையெழுத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, சசிகலா அணி தரப்பில் ஆயிரத்து 991  பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் அதிமுக பொதுக் குழு உறுப்பினர்களின் கையெழுத்து இடம்பெற்றிருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது. அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்று கூறி, தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் முறையிட்டுள்ள நிலையில், அவர்கள் தரப்பிலும் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


Advertisement

Advertisement
[X] Close