நீட் தேர்வு முறைகேடு: கல்லூரியில் இருந்து இர்ஃபான் நீக்கம்

நீட் தேர்வு முறைகேடு: கல்லூரியில் இருந்து இர்ஃபான் நீக்கம்
நீட் தேர்வு முறைகேடு: கல்லூரியில் இருந்து இர்ஃபான் நீக்கம்

நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர் இர்ஃபான் தருமபுரி மருத்துவக் கல்லூரியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்

நீட் தேர்வில் ஆள்மாறாட்ட புகாரில் கைதான மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தரகர்கள், ‌ஆள்மாறாட்டம் மூலம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த பிற மாணவர்கள் குறித்த தகவல்கள் சிபிசிஐடிக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. அதன்படி ஆள்மாறாட்ட புகாரில் மாணவர் பிரவீன் அவரது தந்தை சரவணக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

இதேபுகாரில் சிக்கிய இர்ஃபான் என்ற மாணவர் மொரீசியஸ் நாட்டிற்கு தப்பிச்சென்றதாக கூறப்பட்ட நிலையில், சேலம் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சிவா முன்னிலையில் நேற்று சரணடைந்தார். அவரை வரும் 9 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் தருமபுரி மருத்துவக் கல்லூரியில் இருந்து இர்ஃபான் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com