ஊட்டியில் தான் படித்த போது தமிழை படித்திருக்க வேண்டும் என மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார்
ஐஐடி நிகழ்ச்சிக்காக சென்னை வந்த பிரதமர் மோடி, மாணவர்கள் மத்தியில் பேசிய போது தமிழ் குறித்து பேசினார். உலகின் மிகப்பழமையான மொழி தமிழ். தமிழை போற்றுவோம்” எனப் பேசினார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் பேசிய போது, ''நான் அமெரிக்கா சென்று வந்திருக்கிறேன். அங்கு நான் பேசும்போது தமிழ்மொழி மிகவும் பழமையான மொழி என்று சொல்லியிருக்கிறேன். அதுதான் அங்குள்ள ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது'' என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் மோடியின் பேச்சைக்குறிப்பிட்டு மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த மகேந்திரா ட்வீட் செய்துள்ளார். அதில், '' ஐநாவில் பேசிய மோடி உலகின் பழமையான மொழி என்று தமிழைக் குறிப்பிட்டார். அதுவரையிலும் அதை தெரிந்துகொள்ளாமல் இருந்ததற்காக நான் வெட்கப்படுகிறேன்.
அந்த உண்மை எனக்குத் தெரியாமல் இருந்துள்ளது. தமிழ் மொழியின் பெருமையை இந்தியா முழுவதும் நாம் பரப்ப வேண்டும். நான் ஊட்டியில் உள்ள பள்ளியில் படித்தேன். அப்போது நான் தமிழை படித்திருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, எனது பள்ளித் தோழர்களிடமிருந்து, துஷ்பிரயோகம் செய்யும் சில வார்த்தைகளை மட்டுமே நான் கற்றுக்கொண்டேன்'' என குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.94.23 லட்சம் ரொக்கம் பறிமுதல் - தீவிர விசாரணை
ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு - இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு!
44வது செஸ் ஒலிம்பியாட் தொடரிலிருந்து விலகியது சீனா! இந்தியாவுக்கு பாதிப்பா?
முன்னெச்சரிக்கையாக தடுக்கப்பட்ட கொலை சம்பவம்! ஆயுதங்களுடன் 10 சிறார் உட்பட 14 பேர் கைது
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'