[X] Close

நீர் தேங்கிய இடத்தில் பயிற்சி செய்த சச்சின் டெண்டுல்கர் - வீடியோ 

Sachin-Tendulkar-shares-video-of-practice-on-water-logged-surface

நீர் தேங்கிய இடத்தில் பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோவை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் உலகில் பல முக்கிய சாதனைகளை படைத்துள்ளார்.  டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார். அத்துடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 100 சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையையும் சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ளார். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெற்றார். அதன்பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது தனது கருத்துகளை பதிவு செய்து வருகிறார். 


Advertisement

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தண்ணீர் தேங்கிய இடத்தில் பயிற்சி மேற்கொள்வது போல் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், “கிரிக்கெட் மீது உள்ள ஆர்வமும் காதலும் எப்போதும் பயிற்சி செய்ய புதிய முறைகளை கற்று தரும். அத்துடன் நாம் என்ன செய்கிறோமோ அதனை நாம் அனுபவித்து செய்யவேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார். 

இந்த வீடியோவில் நீர் தேங்கிய இடத்தில் சச்சின் டெண்டுல்கர் பந்துகளை லாவகமாக அடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அவர் மகிழ்ச்சியாக பயிற்சி செய்யும் காட்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. 

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close