நீட் தேர்வு மூலம் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை ஆகிய இருவருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து தேனி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு மூலம் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா என்ற மாணவர் சேர்ந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கல்லூரி முதல்வர் கண்டமனூர் விலக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து உதித் சூர்யாவை தேடி வந்தனர்.
இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு மதுரை நீதிமன்றத்தில் உதித் சூர்யா தரப்பு மனுத் தாக்கல் செய்தது. ஆனால் மாணவர் உதித் சூர்யா சிபிசிஐடி முன்பு ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதைத்தொடர்ந்து திருப்பதியில் உதித் சூர்யா மற்றும் அவரது பெற்றோரை கைது செய்த தனிப்படை காவல்துறையினர் சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து உதித் சூர்யா மட்டுமே அவரது தந்தை ஆகிய இருவரிடமும் சிபிசிஐடி காவல்துறையினர் இன்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் மகனை மருத்துவராக்க வேண்டும் என்ற ஆசையில் ஆள்மாறாட்டம் செய்து உதித் சூர்யா தந்தை ஒப்புக்கொண்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் உதித் சூர்யாவிற்கும் அவரது தந்தை ஆகிய இருவருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து தேனி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Loading More post
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
டாஸ் முதல் டெத் ஓவர் வரை.. #GLvsRR இரண்டில் எது உண்மையில் பலமான அணி?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!