[X] Close

கனமழையால் முடங்கிய புனே : இதுவரை 7 பேர் பலி

Pune-totally-affected-for-Heavy-Rain-and-Flood---7-Persons-Die

புனே நகரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர். 

மகாராஷ்டிராவின் புனே நகரின் சின்ஹாகட் சாலையில் வெள்ளத்தில் சிக்கிய கார் ஒன்றில் இருந்து ஒருவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இதேபோன்று புனே நகரின் சஹாகர் நகர் அருகே மற்றொரு உடலை தீயணைப்பு படை அதிகாரிகள் மீட்டுள்ளனர். அனேஷ்வர் என்ற பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒன்பது வயது சிறுவன் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. 


Advertisement

கனமழையை அடுத்து புனே நகர், புராந்தர், பராமதி, போர் மற்றும் ஹாவேலி பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழை தற்போது ஓய்ந்தாலும் சாலையில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய 500க்கும் மேற்பட்டோர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். இதனால் புனேயில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close