மகன் திருமண ஏற்பாடுகளுக்காக பரோல் கேட்டு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயஸ் தாக்கல் செய்த மனுவுக்கு சிறைத்துறை டிஐஜி மற்றும் புழல் சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெதர்லாந்தில் வசிக்கும் தன் மகன் தமிழ்கோவிற்கு திருமண ஏற்பாடு செய்ய 30 நாட்கள் பரோல் வழங்க கோரி சிறைத்துறை டிஐஜி-க்கு மனு அளித்ததாகவும் அந்த மனு மீது 40 நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பரோல் வழங்க சிறைத்துறை டிஐஜி-க்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரி உயர்நீதிமன்றத்தில் பயஸ் மனுத் தாக்கல் செய்தார். தனக்கு பரோல் வழங்கினால் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள வழக்கறிஞர் தடா சந்திரசேகரன் வீட்டில் தங்க போவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காராமன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனு குறித்து விளக்கமளிக்க 2 வார காலம் அவகாசம் கோரினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 2 வாரங்களில் சிறைத்துறை டிஐஜி, புழல் சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide