[X] Close

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து

On-Manmohan-Singh-s-Birthday--PM-Modi-Wishes-Him

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 87 வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மன்மோகன் சிங் தனது 87-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி, ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Advertisement

அதில், முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கைக்காக பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close