நீட் ஆள்மாறாட்ட வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பிய 7 கேள்விகள்

நீட் ஆள்மாறாட்ட வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பிய 7 கேள்விகள்
நீட் ஆள்மாறாட்ட வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பிய 7 கேள்விகள்

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் மூலம் தேனி மருத்துவ கல்லூரியில் மாணவர் ஒருவர் சேர்க்கப்பட்ட விவகாரம் குறித்து சென்னை உயர் நீதிமன்ற கேள்வி 7 கேள்விகளை எழுப்பியுள்ளது. 

அந்த கேள்விகள் பின்வருமாறு:-

(1) எத்தனை பேர் ஆள்மாறாட்டம் மூலம் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை ?

(2) நீட் தேர்வு எழுதியவர்களின் அடையாளம், மாணவர் சேர்க்கை பெற்றவர்களின் அடையாளத்தை சரிபார்த்தார்களா ?

(3) ஆள்மாறாட்டம் மற்றும் மோசடி தொடர்பாக வேறு வழக்குகள் கண்டறியபட்டுள்ளதா ? பதிவுசெய்யபட்டுளாதா ? 

(4) தேனி மருத்துவக் கல்லூரி மாணவருக்கு எதிரான ஆள்மாறாட்ட வழக்கு குறித்த விசாரணை எந்த நிலையில் உள்ளது ?

(5) மோசடி மூலம் மாணவர் சேர்க்கை பெற்றுள்ளார் என தெரிந்தும் தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உண்மையா ?

(6) நீட் தேர்வுக்கு மாணவரை சோதித்து அனுப்பியது முதல் அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளதா ?

(7) இரட்டை இருப்பிடச் சான்று அளித்து மாணவர் சேர்க்கை பெற்றது போல வேறு வகையில் மோசடியாக மாணவர் சேர்க்கை பெற்றுள்ளனரா என காண்டறியப்பட்டுள்ளதா ?

இந்த 7 கேள்விகளுக்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com