[X] Close

இந்தியாவின் தந்தையே மோடிதான் : ட்ரம்ப் புகழாரம்

Modi-brought-India-together-like-a-father--May-be----yeah-he-is-the-father-of-India----Trump

இந்தியாவின் தந்தையே பிரதமர் நரேந்திர மோடிதான் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புகழ்ந்துள்ளார்.

நியூயார்க் நகரில் இந்தியா - அமெரிக்கா இடையிலான இருந்தரப்பு சந்திப்பு நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, அதிபர் டொனால்டு ட்ரம்ப் இருவரும் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் பேசிய அதிபர் ட்ரம்ப், “மோடிக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது. இந்தியாவுடன் வர்த்தக ரீதியிலான ஒப்பந்தங்கள் விரைவில் தொடங்க உள்ளன. மோடி ஒரு சிறந்த ஜெண்டில்மேன். சிறந்த தலைவர். அவருக்கு முன்பாக இந்தியா ஒரு மோசமான நிலையில் இருந்தது. ஒரு தந்தையைப் போல் இந்தியாவை மோடி ஒருங்கிணைத்து கொண்டு வந்துள்ளார். ஒருவேளை அவர்தான் இந்தியாவின் தந்தையாக இருக்கலாம்” என மோடியை புகழ்ந்து தள்ளினார்.


Advertisement

உலகின் முதன்மையான பயங்கரவாத நாடு ஈரான் என ட்ரம்ப் கூறிய உடன், அப்படியென்றால் பாகிஸ்தான் குறித்து என்ன சொல்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “பாகிஸ்தான் பற்றி பிரதமர் மோடி உரக்கமாகவும், தெளிவாகவும் தெரிவிப்பார்” என்றார்.

இதனையடுத்து பேசிய பிரதமர் மோடி, “அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எனது நண்பர் மட்டுமின்றி இந்தியாவின் சிறந்த நண்பர்” என்றார்.

Related Tags : modiTrumpமோடிட்ரம்ப்
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close