[X] Close

15 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை

Chennai-Met-warning-to-15-districts-for-Heavy-Rain

15 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் 15 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் எனவும், 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


Advertisement

நாளை மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். குமரிக்கடல், தென் தமிழக கடலோர பகுதி மற்றும் மாலத்தீவு பகுதிகளில் வலிமையான காற்று வீசும் என்பதால், மீனவர்கள் அடுத்த 2 நாள்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை, திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரம் மற்றும் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் 14 சென்டிமீட்டர் மழையும், பட்டுக்கோட்டையில் 11 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close