Published : 24,Sep 2019 10:26 AM

2 லட்சம் லைக்குகளை அள்ளிய பிகில் போஸ்டர்..!

Bigil-First-Look-Poster-is-the-First-Ever-Movie-Poster-in-Twitter-History---to-hits-200K-Likes---

பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இரண்டு லட்சம் லைக்குகளை தாண்டியுள்ளது.

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீயுடன் விஜய் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள படம் ‘பிகில்’. ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கால்பந்து பயிற்சியாளராக விஜய் நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, கதிர், பாலிவுட் நடிகர் ஜாக்கி செஷராஃப்  உள்பட பலர் நடித்துள்ளனர். 

                          

இந்நிலையில், பிகில் படத்தில் முதல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளார்கள். பிகில் படம் குறித்து மொத்தம் மூன்று போஸ்டர் வெளியாகியுள்ளது. முதல் போஸ்டரில் இரண்டு விஜய் இரண்டு வித்தியாசமான தோற்றத்தில் இருப்பார். #BigilFLhits200KLikes என்ற ஹேஷ்டேக்கில் விஜய் ரசிகர்கள் போஸ்டர் தொடர்பான தகவலை பகிர்ந்து வருகின்றனர்.

                                    

போஸ்டர் அதிக அளவில் பகிரப்பட்டு வரும் அதே வேளையில் போஸ்டருக்கு எதிராகவும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. இறைச்சி தொழிலை அவமானப்படுத்தும் வகையில் போஸ்டர் உள்ளதாக கூறி இந்த மனு அளிக்கப்பட்டது. அத்துடன், பாடல் வெளியீட்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட போஸ்டரில் விஜய் கையில் கத்தி வைத்திருந்தார். இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சர் ஜெயக்குமார் கூட இதனை விமர்சித்து இருந்தார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்