[X] Close

படுக்கையறையில் கிடந்த 6 அடி நீள பாம்பு - குடும்பத்தினர் அச்சம் 

Woman-finds-6-ft-long-cobra-found-on-sleeping-son---s-pillow-in-Haryana

குழந்தைகள் உறங்கிக்கொண்டு இருந்த படுக்கையறையில் கிடந்த 6 அடி நீள பாம்பை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.


Advertisement

ஹரியானா மாநிலத்தின் சுல்தான்பூரில் மஞ்சலி என்ற பெண் தன் மகன் மற்றும் மகளுடன் வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்துள்ளார். நள்ளிரவு 1 மணிக்கு கண் விழித்த மஞ்சலி, தன் குழந்தைகள் உறங்கிக்கொண்டு இருந்த படுக்கையில் 6 அடி நீள பாம்பு ஒன்று படுத்துக்கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அறையை விட்டு வெளியே வந்த பெண், வீட்டில் இருந்த அவசர மணியை அழுத்தியுள்ளார். ஆனால் நடு இரவு என்பதால் யாரும் உதவிக்கு வரவில்லை. 


Advertisement

(மாதிரிப்படம்)

இரவுப்பணிக்குச் சென்றிருந்த தன்னுடைய கணவர் ராஜேஷ் குமாருக்கு போன் செய்த அவர், வீட்டுக்குள் பாம்பு புகுந்ததை கூறியுள்ளார். இதற்கிடையே தன்னுடைய குழந்தைகளை அறையை விட்டு பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளார் மஞ்சலி. சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த கணவர் பாம்பை விரட்ட முயற்சி செய்தும் பலனேதும் இல்லை. இதனை அடுத்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் படுக்கையில் படுத்துக்கிடந்த பாம்பை பாதுகாப்பாக பிடித்துச் சென்றனர். 

இது குறித்து பேசிய ராஜேஷ் குமார், என் மனைவி பயத்தால் நடுங்கிவிட்டாள். குழந்தைகளை பாதுகாப்பாக அறையை விட்டு வெளியேறச் சொன்னோம். என் மகன் போர்வையை சுருட்டி பாம்பின் மீது போட்டு அதனை தப்பிக்க விடாமல் செய்தான் என தெரிவித்தார் 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close