நடிகர் விஜய் நாட்டின் குடிமகன் என்றும் அவர் அரசியல் கருத்தை பேசக்கூடாது என யாரும் கூற முடியாது என்றும் பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் தேச ஒற்றுமை என்ற தலைப்பில் ‘ஒரே தேசம் ஒரே சட்டம்’ என்ற மக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கீழடி என்பது தமிழர்களின் பெருமைகளில் ஒன்று. அது எந்த வகையிலும் பாதிக்காத வகையில் மத்திய அரசு முழுக்க முழுக்க துணையாக இருக்கும். அரசியலில் அடிப்படை அரிச்சுவடி கூடத் தெரியாதவர்கள் காங்கிரஸார் என்பது நன்றாகத் தெரிகிறது.
இடைத்தேர்தலில் பாஜக சார்பாக வேட்பாளர் நிறுத்தப்படுவது குறித்து கட்சித் தலைமை விரைவில் முடிவு எடுக்கும். நடிகர் விஜய் இந்த நாட்டின் குடிமகன். அவர் அரசியல் கருத்தை கூறக் கூடாது என யாரும் கூற முடியாது. உண்மையான அரசியல் கருத்துகளை சொன்னால் யாருக்கும் வருத்தம் கிடையாது. அனைவருக்கும் சந்தோசம் தான். அப்படி இல்லை என்றால் அவருடைய மனசாட்சி அவரை குத்தும். இது நடிகர் விஜய்க்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் பொருந்தும்” என்றார்.
Loading More post
பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதா? அண்ணாமலைக்கு வலுக்கும் கண்டனம்
திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 4 கிமீ தூரம் நீளும் வரிசை
இன்று திறக்கப்படுகிறது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!