Published : 21,May 2017 11:00 AM

ரஜினியை பற்றி கேட்காதீர்கள்: ஹாட்டான விஜயகாந்த்!

dmdk-leader-vijayakanth-angry

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபடும் கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்டோருக்கு வெளிநாடுகள் புகலிடமாக இருக்கிறது. தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார். அப்போது அவரிடம், ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், மீண்டும் மீண்டும் ரஜினிகாந்த் குறித்து என்னிடம் கேட்காதீர்கள். அதே நேரத்தில், ரஜினி எனக்கு நல்ல நண்பர். இது ஜனநாயக நாடு, இங்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், மக்கள் தேர்ந்தெடுப்பவர்களே ஆள முடியும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை நாறிப்போய் உள்ளது. இரு அணிகளும் நான்கு ஆண்டுகளைக் கடத்துவது பற்றியே சிந்தனை செய்கின்றன. அவர்களுக்கு மக்களைப் பற்றிய அக்கறை இல்லை. விரைவில் ஆட்சி கலையும். தேர்தல் நடைபெறும். என்று அவர் தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்