இந்திய விமானப்படையால் தாக்கப்பட்ட பாலகோட் பயங்கரவாதிகள் முகாமில், ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பயிற்சியை மீண்டும் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
காஷ்மீர் தாக்குதலால் தன் நெஞ்சில் தீ எரிந்துகொண்டு இருப்பதாகவும், தாக்குதலுக்கு எதிரிகள் நிச்சயம் பெரிய விலை கொடுக்க வேண்டுமென்றும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் ஈடுபட்டது. பாகிஸ்தான் எல்லையில் இருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் முகாம் மீது 1000 கிலோ அளவிலான குண்டுகளை இந்திய விமானப்படை வீசி தாக்கியது. இந்திய விமானப் படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் பயங்கரவாதிகளின் முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், விமானப்படையால் தாக்கப்பட்ட பாலகோட் முகாமில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பயிற்சியை மீண்டும் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த 40 பயங்கரவாதிகளுக்கு அங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அங்கும், மன்ஷெரா, குல்புர், கோட்லி ஆகிய பகுதிகளிலும் ஜிகாதி பயிற்சி அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீர் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடந்த இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதற்காக இந்தியாவுக்குள் நுழைய பூஞ்ச், ரஜோரி எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் தயாராக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளன.
Loading More post
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை
கோலாகலமாக நடைபெற்றது தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்